சரவணப் பொய்கையில் மூழ்கி கல்லூரி  மாணவன் உயிரிழப்பு... குளிக்கச் சென்ற போது  நண்பர்கள் கண்முன்னே சோகம்!

 

மதுரை  மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சரவணப் பொய்கையில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளித்து கொண்டிருந்த போது அவர்களில் ஒருவன் ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது நீரில் இருந்து மீண்டு வர மாணவன் பலமுறை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தேடி மாணவனின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவன் மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பாலா சந்துரு (17) என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!