தாத்தா இறந்த துயரம் தாங்காமல் கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து பலி!
கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாதவராவின் மகள் அனுஸ்ரீ (20). இவர் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு அனுஸ்ரீயின் தாய்வழி தாத்தா சேஷவரதலு உடல்நலக்குறைவால் ஆந்திராவில் உயிரிழந்தார். இறுதி சடங்குகளை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் சமீபத்தில் சென்னை திரும்பியுள்ளார். நேற்று காலை தந்தை அவரை கேளம்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாத்தா மறைவால் மனமுடைந்த அனுஸ்ரீ, இரவு நேரத்தில் குடியிருப்பில் இருந்து கீழே குதித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாத்தா மரணத்தால் ஏற்பட்ட மனஅழுத்தமா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!