லிப்ட் கொடுப்பதாக ஆசை காட்டி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே, லிப்ட் கொடுப்பதாக கூறி கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தனியார் கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவி, கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை இல்லாத நிலையில், தினமும் பேருந்தில் சென்று வருவது அவரது வழக்கம்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கணேஷ் (29), வீட்டிற்கு லிப்ட் தருவதாக கூறி மாணவியை ஏற்றிச் சென்றார். சிறிது தூரம் சென்றதும், ஆள்நடமாட்டமற்ற இடத்திற்கு வாகனத்தை திருப்பினார். எதிர்ப்பு தெரிவித்த மாணவியை பீர் பாட்டிலால் தாக்கி மயக்கமடையச் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார்.
மயக்கம் தெளிந்த மாணவி நண்பர்களிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமறைவாக இருந்த கணேஷை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!