கல்லூரி மாணவிகள் முதல்வரிடம் கோரிக்கை... உடனே நிறைவேற்ற உத்தரவு!
தூத்துக்குடி மாவட்ட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று, உடனே நிறைவேற்ற முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் ரோடு ஷோவில் இருபுறமும் நின்ற பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சுமார் 200 மாணவிகள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து முதல்வர் வாகனத்தை நிறுத்த சொன்னார்.
அப்போது மாணவிகள் முதல்வருக்கு பூங்கொத்து வழங்கினர். முதல்வரிடம் கல்லூரி மாணவிகள் மருத்துவ கல்லூரியில் வகுப்புகள் விரிவாக்கம் செய்ய வேண்டும், விடுதியை மேம்படுத்த வேண்டும், தாங்கள் கல்லூரியில் இருந்து மருத்துவமனை சென்று வர பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடனே கனிமொழி எம்பியை அழைத்து மாணவிகளின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து மாணவர்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கும், கனிமொழி கருணாநிதி எம்பிக்கும் நன்றி தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!