கீழே இறங்க மாட்டேன்!!  120 அடி உயர செல்போன் டவரில் ஏறி இளம்பெண் போராட்டம் !! 

 

கரூா் தான்தோன்றிமலையை பகுதியில் உதயகுமார் - செல்வி (45) தம்பதி வசித்து வந்தனர். கணவர் உதயகுமார் உயிரிழந்துவிட்ட நிலையில், செல்வி தனது மகன் மணீஸ் (22) உடன் வசித்துவருகிறார். செல்வி அப்பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் தனது மகனுடன் வேடசந்தூரில் முட்டை வியாபாரம் செய்ய செல்வி சென்றுள்ளார். அங்கு கறிக்கடை நடத்தும் முருகேசன் என்பவா் தனது கடையருகே முட்டை விற்ககூடாது எனக் கூறி திட்டியதாக கூறப்படுகிறத. இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன் செல்வியையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்ட முயன்றார், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்த நிலையில், ஒரு மாதம் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை என செல்வி குற்றம்சாட்டுகிறார். எனவே, தான்தோன்றிமலை வள்ளுவா் தெருவின் எதிரேயுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி முருகேசன் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் கீதாஞ்சலி மற்றும் தாந்தோன்றிமலை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்தினா் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முருகேசனை கைது செய்துவிட்டோம், கீழே இறங்குங்கள் ஒலிபெருக்கியில் கூறியதைடுத்து செல்வி கீழே இறங்கினார். இதுதொடா்பாகவும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!