undefined

கம்யூனிஸ்ட் நிர்வாகியின் பைக் திருட்டு... செங்கல்பட்டில் பரபரப்பு! 

 

செங்கல்பட்டு பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் பைக் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மேலைமையூர் பகுதியை சேர்ந்த சங்கரின் மகன் சபரி ஆனந்தன் (39) கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியாக உள்ளார். நேற்று மதியம் திம்மராஜகுளம் பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

சங்கப் பணிகள் முடிந்து மாலை வீடு செல்ல பைக்கை எடுக்க வந்தபோது அது மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே பைக்கை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனை, ரயில்நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் தொடர் திருட்டு நடப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!