குளத்திற்குள் பாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் பிரசார வாகனம்... அதிர்ச்சி வீடியோ!
கேரளாவில் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நெய்யாற்றிங்கரை அருகே கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரின் பிரசார வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் நெய்யாற்றிங்கரை அருகே உள்ள திருப்புரம் பஞ்சாயத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்தாஸ் என்பவர் தனது ஆம்னி வேனைப் பிரசாரப் பணிகளுக்காகப் பயன்படுத்தி வந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மோகன்தாஸ் இல்லாத நேரத்தில், அவரது ஓட்டுநர் அந்த வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பிரசார வேன், சாலையோரம் இருந்த குளத்திற்குள் பாய்ந்து, முழுவதுமாகக் தண்ணீரில் மூழ்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் கயிறு கட்டி வேனை இழுத்து மேலே கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!