undefined

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்  தலைவரின் மனைவி மீது  தாக்குதல்... பெரும் பரபரப்பு!  

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியும், மாற்றுத்திறனாளிகள் சங்க பொதுச் செயலாளருமான ஜான்சி ராணி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை எழும்பூரில் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்ததாகவும், தேவையான அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு இடங்களில் தங்கவைத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், வசதிகள் இல்லாததை மாற்றுத்திறனாளிகள் கண்டித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ஜான்சி ராணி மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் மீது இரக்கமின்றி திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!