அரசியல் ஆதாயம் தேட தமிழகத்தில் மோதல் களமாக்காதீர்கள்... கம்யூனிஸ்ட் பியூஸ் கோயலுக்கு கண்டனம்!  

 

தமிழ்நாட்டை மோதல் களமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் குடும்பம் குறித்து விஷமத்தனமான அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திராவிட இயக்கம் கடந்த நூற்றாண்டாக அறிவியல் கண்ணோட்டம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பி தமிழ் சமூகத்தை பண்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கருத்துகளுக்கு செயல்வடிவம் அளிப்பதில் திமுக அரசு சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய வரலாற்றை மறைத்து திமுக அரசையும், முதலமைச்சர் குடும்பத்தையும் இந்து விரோதமாக சித்தரிக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது. சமூக நல்லிணக்கமும் அமைதியும் நிலவும் தமிழ்நாட்டை மோதல் களமாக மாற்றும் முயற்சிகளை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!