undefined

தமிழக சட்டப்பேரவையில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல்!

 


 
ஏப்ரல் 21ம் தேதி திங்கட்கிழமை நேற்று உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் உடல்நிலை குறைவு காரணமாக நேற்று காலமானார்.  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் போப் ஆண்டவரின் உடல்நிலை பின்னடைவை அடைந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போப் ஆண்டவர் மறைவு காரணமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். உலக தலைவர்கள் பலரும் போப் ஆண்டவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் நாடு முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும், நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல்  போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழக அரசு சார்பில் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  


இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. போப் மறைவு பேரவையை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் போப் பிரான்சிஸ் என தெரிவிக்கப்பட்டது. போப் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் அரைக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?