undefined

காங்கிரஸ் 60 தொகுதிகள் இலக்கு… தேர்தல் பணிகள் மும்மூரம்!  

 

தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கடந்த 18-ந் தேதி டெல்லியில் ஆலோசனை நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழக நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர். கூட்டணி விவகாரத்தில் பொது வெளியில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாக 60 சட்டசபை தொகுதிகளை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலும் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே 60 தொகுதிகளை அடிப்படையாக வைத்து கூட்டணியில் இடங்களை கேட்டுப்பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!