2026 சட்டமன்றத் தேர்தல் ... காங்கிரஸ் தனித்து போட்டி!
மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் சவாலாக அமையும். 294 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து பெரும்பான்மியை பெற 148 இடங்களை கைப்பற்ற வேண்டிய நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் கட்சியின் தொடர்ச்சியான வெற்றி சோதிக்கப்படும்.
இந்தத் தேர்தல் தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் உத்திகளை பாதிக்கும் முக்கிய நிகழ்வாகும். தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தேர்தல்களின் அடிப்படையில், மேற்குவங்காளத்தில் வன்முறை, அரசியல் பதற்றம் காரணமாக பல கட்டங்களாக தேர்தல் நடத்துவது வழக்கம். கடந்த 2021 தேர்தல் மார்ச் 27 முதல் மே 2 வரை 8 கட்டங்களாக நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி இதை தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி இந்த முடிவை உறுதி செய்தனர். திரிணாமூல் அல்லது இடதுசாரிகளுடன் கூட்டணி அமைக்காமல் காங்கிரஸ் தனித்து களமிறங்குவது கட்சியின் வலிமையையும், வாக்கு வங்கியை அதிகரிக்கப் பெரும் வாய்ப்பையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் பாஜகவுக்கும் சவாலாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!