நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.20) நடைபெறும் என மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பிற்பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கட்சியின் அமைப்பு வலுப்படுத்தல் மற்றும் ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ். ராஜேஷ்குமார் பங்கேற்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!