பகீர் வீடியோ !! ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டுவிழுந்து கான்ஸ்டபிள் பலி..!!

 

அண்மைக்காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு நிகழும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அண்மையில் கன்னட நடிகர் வினித் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து பெரியளவில் விழிப்புணர்வு பெற்றது. 

எனினும் அவ்வப்போது உயிரிழப்புகள் நிகழ்கிறது. அந்தவரிசையில் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் தெகந்தராபாத் ஆசிப் நகரில் உள்ள காவல் நிலையத்தில் 24 வயதான விஷால் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். இவர் மொரட்பள்ளி உள்ள ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில், வழக்கம்போல நேற்று இரவு 8 மணியளவில் ஜிம்மிற்கு வந்த விஷால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென விஷாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இடத்திலேயே விஷால் சுருண்டு விழுந்தார்.

விஷால் மயங்கி விழுந்ததை கண்ட அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது விஷால் சுருண்டு விழும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?