undefined

பெண் நிர்வாகியுடன் தொடர்பு...  தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் அதிரடி நீக்கம்!

 

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜே.ஜே. செந்தில்நாதன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகி ஒருவர் மீது இத்தகைய கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக விஜய் ரசிகர் மன்றத்தின் தூணாக விளங்கிய செந்தில்நாதன், கடந்த ஆண்டு கட்சித் தொடங்கப்பட்ட போது நம்பிக்கைக்குரிய நபராகக் கருதப்பட்டு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி நீக்கத்திற்குப் பின்னணியில் ஒரு சர்ச்சைக்குரிய புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள், செந்தில்நாதன் அத்துமீறி நுழைந்ததாகக் கட்சித் தலைமைக்குப் புகார்கள் சென்றன. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவருக்கும் அந்தப் பெண் நிர்வாகிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகத் தெரியவந்தது. மேலும், இது தொடர்பான சில வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வைரலானதைத் தொடர்ந்து, கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சியின் நற்பெயரைக் காக்கத் தலைமை இத்தகைய உறுதியான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. "பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான அரசியல் சூழலை உருவாக்குவதே தலைவரின் நோக்கம்; அதை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது" என்று தவெகவின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். செந்தில்நாதனின் பதவி பறிக்கப்பட்டது நாமக்கல் மாவட்ட தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!