தமிழகத்தில் தொடரும் அவலம்... பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் மரணம்!
இந்நிலையில் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் பரோட்டா சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் ஏழுமலை, சங்கீதா. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், இவர்கலின் மகன் சுதர்சனன் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வீட்டின் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் சுதர்சனன் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். இதில் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுதர்சனன் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சரியாகாததால் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். அதே நேரத்தில் பரோட்டா சாப்பிட்டதால் தான் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!