undefined

தொடரும் பணிச்சுமை... SIR சிறப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் மாரடைப்பால் மரணம்!

 

ராஜஸ்தானில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (SIR) போது, கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (B.L.O.) ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகக் கடும் பணிச்சுமையால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அனுஜ் கார்க் (வயது 42). அவர் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்காகத் தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக (B.L.O.) நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 29) இரவு சுமார் 1 மணியளவில், அவர் தனது வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரது குடும்பத்தினர் அனுஜ் கார்க்கை மீட்டு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அனுஜ் கார்க் அவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் வேதனையுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அவர் கடந்த சில நாட்களாக கடும் பணிச்சுமைக்கு ஆளாகியிருந்தார்.

இந்தப் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சமூகத்தில் பெரும் பொறுப்புடன் செயல்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீது தேர்தல் ஆணையம் செலுத்தும் அழுத்தம் காரணமாகவே இத்தகைய துயரங்கள் நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த SIR பணிக் காலத்தின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்படப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள், பி.எல்.ஓ. அதிகாரிகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தனர். அண்மையில், தேர்தல் ஆணையம் இந்த உயிரிழப்புகளின் பின்னணியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, இந்தப் பணிகளுக்கான காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அனுஜ் கார்க்கின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!