undefined

தொடர் மழை... சென்னை குடிநீா் ஏரிகளில் 88% நிரம்பியது - 3 ஏரிகள் 90% கொள்ளளவைத் தாண்டியது!

 

சமீபத்தில் வங்கக் கடலில் உருவான 'டித்வா' புயல் காரணமாக வட மாவட்டங்களில் பெய்த பலத்த மழையின் விளைவாக, சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. முக்கிய 5 ஏரிகளிலும் மொத்தமாக 88.85 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல், பூண்டி உள்ளிட்ட ஐந்து முக்கிய ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். இதில் நேற்று (வியாழக்கிழமை) நிலவரப்படி, 10,446 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் நீர் இருப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. புழல் ஏரி மிக அதிகபட்சமாக 95.94 சதவீதம் நிரம்பியுள்ளது. அதன் மொத்தக் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும்.

பூண்டி ஏரியில் 91.61 சதவீதமும், கண்ணன்கோட்டை ஏரியில் 92.80 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. இந்த மூன்று ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. இதேபோல், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 88.01 சதவீதமும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 59.94 சதவீதமும் நீர் இருப்பு நிரம்பியுள்ளது.

பூண்டி, புழல், கண்ணன்கோட்டை ஆகிய மூன்று ஏரிகளிலும் நீர் இருப்பு 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீரைத் திறந்து விடத் தயாராகி வருகின்றனர். ஏரிகளின் நீர்வரத்து மற்றும் நீர் அளவு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!