undefined

சர்ச்சை வீடியோ: “கூடப் படுக்கவும், குழந்தைப் பெற்றுக் கொடுக்கவும் தான் பெண்கள்...” - கேரள சிபிஎம் தலைவரின் அதிர்ச்சி பேச்சு!

 

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சிபிஎம்) சேர்ந்தத் தலைவர் சயீத் அலி மஜீத் ஒரு பொது நிகழ்வில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நகராட்சித் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், "பாலியல் தேவைகளுக்காக கூடப் படுப்பதற்கும், குழந்தைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் மட்டுமே பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று அவர் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மஜீத்தின் சர்ச்சைக்குரிய கருத்து
கடந்த வாரம் நடந்த நகராட்சித் தேர்தலில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சயீத் அலி மஜீத் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார். பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அவர் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் லீக்கைத் தாக்கிப் பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியதற்காக முஸ்லிம் லீக்கைக் குறிவைத்த மஜீத், "வாக்குகளைப் பெறுவதற்காக அவர்கள் பெண்களைக் காட்டினர்... முஸ்லிம் லீக் வாக்குகளுக்காக பெண்களைப் பயன்படுத்துகிறது" என்று குற்றம் சாட்டினார்.

பெண் வெறுப்பு உரை:

மேலும் பேசிய அவர், "நாங்கள் வீட்டிலும் திருமணமானப் பெண்களைக் கொண்டுள்ளோம்... ஆனால் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களைக் காட்டிக் கொள்ள அல்ல. அவர்கள் வீட்டிலேயே உட்காரட்டும்... பெண்களை மணந்து அவர்களுடன் தூங்கவும் குழந்தைகளைப் பெறவும் மட்டுமே அனுமதிக்க வேண்டும்" என்று கூறினார். இந்தக் கருத்துக்குக் கூட்டத்தில் இருந்த சிலரது ஆரவாரமும் இருந்தது. திருமணங்களை ஏற்பாடு செய்யும் போது பாரம்பரியமாகப் பரம்பரை மற்றும் பின்னணியைச் சரிபார்ப்பதன் நோக்கமும் அதுதான் என்றும் அவர் கூறினார்.

சயீத் அலி மஜீத்தின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இதே வேளையில், நகராட்சித் தேர்தல் முடிவுகள் ஆளும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசாங்கத்திற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்):

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப், ஆறு நகராட்சிகளில் நான்கில் வெற்றி பெற்றது. அத்துடன் எல்.டி.எஃப் வசம் இருந்த கொச்சி மற்றும் கொல்லம் மாநகராட்சிகளை வீழ்த்தியதுடன், கண்ணூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டையும் தக்க வைத்துக் கொண்டது.

திருவனந்தபுரம் இழப்பு:

மிக முக்கியமாக, இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டை, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) கைப்பற்றியது. மொத்தமுள்ள 101 இடங்களில், என்.டி.ஏ. 50 இடங்களையும், எல்.டி.எஃப். 29 இடங்களையும் வென்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!