சர்ச்சை வீடியோ!! ஸ்ரீகாளஹஸ்தி கோவில் கருவறையில்  பிரபல யூடியூபர் நடனம்!!

 

இன்றைய தொழில் நுப்ட வளர்ச்சி காரணமாக எது எடுத்தாலும் அதை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்குவதை இளசுகள் பெரும் கடமையாகவே செய்து வருகின்றனர். சாலையில் விபத்து நடந்தாலும் சரி, திருவிழா கொண்டாட்டமானாலும் சரி, கல்யாண வீடுகள் தொடங்கி கருமாதி வீடுகள் வரை அந்தந்த இடத்தில் அதை உணர்வு பூர்வமாக அனுபவிப்பத்தில்லை. அதை படம் பிடித்து லைக்குகள் ,ஷேர்கள் வாங்குவதை தான் நோக்கமாக கொண்டு செயல்படுகின்றனர். கோவில் திருவிழாக்களிலும் சாமியை பார்த்ததும் கையெடுத்து சாமி கும்பிடுவதில்லை. கையில் மொபைல் பிடித்துக் கொண்டு திரிகின்றனர். இன்னும் சிலர் சாலைகளில் படுவேகத்தில் பயணம் செய்த படியே வீடியோ,  புகழ்பெற்ற இடங்களில் நடனம் என செய்து வருகின்றனர். இதற்கு பலவகையான விமர்சனங்கள் வந்த போதிலும் பலரும் இந்த மாதிரியான விஷயங்களை தான் வைரலாக்குகின்றனர் என்பது தான் நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை.

ஆந்திராவில்  புகழ்பெற்ற கோவில்களில் ஸ்ரீகாளஹஸ்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்து சைவ சமய நெறிகளைப் பின்பற்றும் மிகப் பழமையான கோயில் இது. பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாகத் திகழ்கிறது. சைவ ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோவில் ராகு கேது பரிகார பூஜைக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். தோஷம் நீங்குவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பரிகாரம் செய்து வருகின்றனர். கோவிலுக்குள் கேமரா செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

இந்த நிலையில் 10 தினங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரபலமாக இருக்கும் யூடியூபரும், பாடகியுமான மங்லி குழுவினரின் படப்பிடிப்பு கோவிலுக்குள் நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் நாட்டியத்துடன் கூடிய ‘பம்பம் போலே’ (bam bam bhole) என்ற பாடலின் படப்பிடிப்பு கோவிலுக்குள் நடைபெற்றுள்ளது. கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதி, ஞானபிரசன்னாம்பிகை தாயார் சன்னதி, ஸ்படிகலிங்கம் சன்னதி, ராகு கேது பரிகார பூஜை மண்டபம், ஊஞ்சல் சேவை மண்டபம் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் மங்லியின் நாட்டிய படபிடிப்பு நடைபெற்றது.

இந்த பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிவ பக்தர்கள் இந்த பாடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆகம விதிகளின்படி கோவிலுக்குள் கேமரா, செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தப் பாடல் காட்சியை படமாக்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளனர். கருவறைக்குள் செல்வதற்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வது, பூஜைகள் செய்வது படமாக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

<a href=https://youtube.com/embed/dJMFVwZ8ZUI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/dJMFVwZ8ZUI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Bam Bam Bhole | Shivarathri Song 2023 | Promo | Mangli | Indravathi Chauhan | Sira Sri | Prashanth R" width="640">

ஒரு யூடியூபர் தன்னுடைய வியாபாரத்திற்காக மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் படப்பிடிப்பை நடத்தியது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பாடலை படமாக்க தேவஸ்தான அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?