undefined

சர்ச்சை  வீடியோ... உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக கணவன்மார்கள் பதவி பிரமாணம்! 

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிப்ரவரி 11ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.இந்த  உள்ளாட்சித் தேர்தலில் 10 மேயர் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நகராட்சி வார்டுகளில் நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பரசுவாரா கிராமத்தில் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.

allowfullscreen

இதனை அடுத்து அவர்களுக்கு நேற்று பதவி ஏற்பு நடைபெற்றது. இதில் தேர்தலில் போட்டியிட்ட 6 பெண் உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.ஆனால் பதவியேற்பு விழாவில்  வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்களுக்கு   பதிலாக அவர்களது கணவர்கள் பதவி ஏற்று கொண்டனர். 

இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி  நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து புகார்களும் எழுந்துள்ளன. இதனால் தலைமை தேர்தல் அதிகாரி தீவிர விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.  பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவி ஏற்பது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?