undefined

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுங்க... பிரதமர்  மோடிக்கு 16 எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணி கடிதம்!  

 


 இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி தலைவர்கள் நேற்று ஜூன் 3ம் தேதி தலைவர்கள் டெல்லியில்   கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
 
பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் தி.மு.க.வும் கையெழுத்திட்ட நிலையில்,  கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த  கூட்டத்திற்கு பிறகு   திரிணாமுல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரைன்  "பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. பூஞ்ச், உரி, ரஜோரி மற்றும் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக விவாதிப்பது குறித்து கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பாராளுமன்றத்துக்கு பொறுப்பு. பாராளுமன்றம் மக்களுக்கு பொறுப்பானது. அதனால்தான் நாங்கள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறோம் எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது