ஊட்டியை பின்னுக்கு தள்ளிய குன்னூர்… குளிர் தொடரும்... வெதர்மேன் எச்சரிக்கை!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில், தென்னிந்திய தீபகற்பத்தில் மிகக் குளிர்ந்த மலைப்பகுதியாக குன்னூர் மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஊட்டியை பின்னுக்கு தள்ளி குன்னூர் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் குளிர்ச்சியான நாட்களே நீடிக்கும் என்றும், வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
டிசம்பர் 23 நிலவரப்படி குன்னூரில் 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹாசன் 7.9, வால்பாறை 8.3, ஊட்டி 8.4, ஏற்காடு 9.0, அரக்கு 9.4, கொடைக்கானல் 9.8, வயநாடு 11.1 என வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் உட்புற மாவட்டங்களிலும் 17 டிகிரிக்கும் குறைவான குளிர் பல இடங்களில் பதிவாகியுள்ளது.
KTCC எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் தினத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகபட்சமாக சாலைகள் ஈரமாக இருக்கும் என்றும், பெரிய பாதிப்புகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். கடலோர பகுதிகள் மற்றும் மெட்ரோ நகரங்களிலும் குறைந்த வெப்பநிலை நிலவுகிறது என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!