பொதுமக்களே உஷார்... இந்தியாவில் 7,400 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. . இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக 269 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7.400 ஆக உயர்ந்துள்ளது.
கேரளத்தில் புதிதாக 54 பேருக்கு ஏற்பட்டிருப்பதை அடுத்து மொத்த பாதிப்பு 2,109 ஆக உள்ளது. தலைநகர் டெல்லியில் 45 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 672 ஆகவும், குஜராத்தில் 79 புதிய பாதிப்புகளுடன் மொத்தம் 1,437 ஆக உள்ளது.
கொரோனா தீநுண்மிகளின் வெளிபுரதம் உருமாற்றமடையும் போதெல்லாம் சமூகத்தில் சிறிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்திச் செல்லும் அத்தகைய நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்போது என்பி 1.8.1 என்ற வகை கொரோனா பாதிப்பு பரவி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது ஜெ.என்.1 வைரஸின் உட்பிரிவு. அந்த ஜெ.என்.1 வைரஸ் ஒமைக்ரானிலிருந்து உருவான ஒன்று. வைரஸ் பரிமாணத்துக்கான சா்வதேச தொழில்நுட்ப ஆலோசனைக் குழு சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் என்பி 1.8.1 தொற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் நோ்ந்த உயிரிழப்புகள் கொரோனாவால் நிகழவில்லை. மாறாக, இணைநோய்கள் மற்றும் வயது மூப்பு காரணமாக ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!