மத்திய அமெரிக்கா நாடான கோஸ்டா ரிகா அதிபர் தேர்தலில் லாரா ஃபெர்னாண்டஸ் அமோக வெற்றி!
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளர் லாரா ஃபெர்னாண்டஸ் 48.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அந்நாட்டு சட்டப்படி முதல் சுற்றிலேயே 40 சதவீத வாக்குகள் பெற்றால் வெற்றி என அறிவிக்கப்படுவதால், ஏப்ரலில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பொருளாதார நிபுணர் ஆல்வாரோ ராமோஸ் 33 சதவீத வாக்குகளுடன் தோல்வியடைந்தார். தோல்வியை ஏற்றுக்கொண்ட அவர், புதிய அரசுக்கு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸின் தீவிர ஆதரவாளரான 39 வயது லாரா ஃபெர்னாண்டஸ், ஏற்கனவே திட்டமிடல் மற்றும் அதிபர் துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள் தொடரும் என உறுதியளித்துள்ள லாரா, தனது வெற்றி உரையில் கோஸ்டா ரிகாவின் பழைய அரசியல் முறை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறினார். அதிபர் தேர்தலுடன் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி 57 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இருப்பினும் அரசியல் அமைப்பு மாற்றம் போன்ற முக்கிய முடிவுகளுக்கு பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலை தொடர்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!