undefined

காதல் திருமணம் செய்த தம்பதியர் குழந்தையுடன் கொலை... தந்தை, மகன் வெறிச்செயல்!

 

காதல் திருமணம் செய்த பெண்ணை,  அவரது கணவர், 2 வயது குழந்தை ஆகியோருடன் சேர்த்து சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம்  பீகாரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம், நவ்டோலியா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தினி குமாரி (23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த,  தனது சமூகத்தை சேர்ந்தவரான சந்தன் குமார் (40) என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலை சாந்தினியின் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  வீட்டை விட்டு வெளியேறி சந்தன்குமாரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தனியாக வாழ்ந்து வந்த நிலையில்  இத்தம்பதிக்கு ரோஷனிகுமாரி என்ற  பெண் குழந்தை பிறந்தது.

தனது விருப்பத்தை மீறி திருமணம் நடந்து, பெண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் கூட பாப்பு சிங்கிற்கு மகள் சாந்தினி மீது கோபம் தீரவில்லை. இதனால் தனது மகள், அவரது கணவர், குழந்தை யாரிடமும் அவர் பேசுவதில்லை. தனது குடும்பத்தினரும் அவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று உறுதியாக கூறியிருந்தார்.  

இந்நிலையில், நேற்று முன்தினம்  சாந்தினி குமாரி, அவரது கணவர், குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பாப்பு சிங், அவர்களை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி இருக்கிறார். இதில் மூவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். அப்போது அங்கு வந்த பாப்பு சிங்கின் மகன் தீரஜ் சிங்,  தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது சகோதரி உள்பட 3 பேரையும்  சுட்டார். இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, பாப்பு சிங்கும், தீரஜ் சிங்கும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நௌகாசியா போலீஸார் அங்கு விரைந்து சென்று  உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான பாப்புசிங், தீரஜ் சிங் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!