undefined

தீக்குள் துள்ளிக்குதித்து ஓடும் மாடுகள் - கர்நாடகாவில் அரங்கேறிய விநோத வழிபாடு!

 

தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் அருகேயுள்ள பசப்பனதொட்டி கிராமத்தில் இந்த வினோதத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி பண்டிகையைத் தொடர்ந்து வரும் மாட்டுப்பொங்கல் தினத்தில் இச்சடங்கு நடத்தப்படுவது வழக்கம்.

முதலில் மாடுகளை ஏரி அல்லது குளத்தில் குளிப்பாட்டி, அவற்றுக்கு மலர் மாலைகள் அணிவித்து, வண்ணப் பொடிகளால் அலங்காரம் செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஊரின் மையப்பகுதியில் வைக்கோல் மற்றும் விறகுகளைக் குவித்து பெரிய அளவில் தீ மூட்டப்பட்டது. தீ ஜூவாலைகளாக எரியத் தொடங்கியதும், கிராம மக்கள் தங்களது மாடுகளைப் பிடித்து வந்து அந்தத் தீக்குண்டத்தைத் தாண்டச் செய்தனர்.

இவ்வாறு மாடுகளைத் தீயில் தாண்ட வைப்பதால், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நொடிகள் நீங்கும் என்றும், அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்து, கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் இவர்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது. பசப்பனதொட்டி மட்டுமன்றி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் வந்து இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!