பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கவும் தடை... மாவட்ட ஆட்சியர்  அதிரடி உத்தரவு ! 

 

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல்   2026 ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொது அமைதியைப் பேணவும் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு தயாரித்தல், இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்திய வெடிபொருள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது   ஏப்ரல் 7ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை (வாக்குப் பதிவை ஒட்டி). மற்றும்  மே 2ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை (வாக்கு எண்ணிக்கையை ஒட்டி). என குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு தயாரிப்பு கூடங்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறிச் செயல்படும் பட்டாசு ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தற்காலிகத் தடையால் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மற்றும் கொண்டாட்டங்களின் போது பட்டாசு சத்தம் குறைய வாய்ப்புள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!