undefined

 ரயில் மீது கிரேன் விழுந்து கோர விபத்து... 30 பேர் பலி!

 
 

தாய்லாந்தில் ஓடிக்கொண்டிருந்த பயணிகள் ரயில்மீது கட்டுமானத்தில் இருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாகவும், 64 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தலைநகர் பாங்காக்கில் இருந்து உபோன் ரட்சதானி நோக்கி சென்ற 3 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில், நகோன் ரட்சசிமா மாகாணம் அருகே சென்றபோது இந்த விபத்து நடந்தது. அதிவேக ரயில்பாதை கட்டுமானப் பணியில் இருந்த கிரேன் எதிர்பாராதவிதமாக ரயில் பெட்டிகளின் மீது விழுந்தது. இதனால் ரயில் தடம்புரண்டு தீப்பிடித்து, பயணிகள் அலறியடித்தனர்.

ரயிலில் 170-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்து குறித்து உயர் நிலை விசாரணைக்கு தாய்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த அதிவேக ரயில் பணிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததா என விசாரணை நடந்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!