பகீர் வீடியோ... சாலையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த கார்... கீழே குதித்த ஓட்டுனர்!
ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலு-மனாலி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தார். இச்சம்பவம் அருகில் இருந்த நபரின் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கார் மிக வேகமாக சாலையில் சென்று, பின்னர் சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழும் காட்சி தெரிகிறது.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிவேகம் மற்றும் வழுக்கும் சாலை இவ்விபத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஓட்டுநரின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்புக்குழுக்கள் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த காரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!