undefined

இந்திய வீரர்கள் பத்மநாப கோவிலில் சாமி தரிசனம்! 

 

இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஏற்கெனவே திருவனந்தபுரம் வந்தடைந்தனர். போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் ஆன்மிக தரிசனத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். வீரர்கள் எளிய உடையில் கோவிலுக்குள் நுழைந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் கோவிலில் தங்கியிருந்த இந்திய வீரர்கள், பின்னர் ஹோட்டலுக்கு திரும்பினர். முக்கிய போட்டிக்கு முன் வீரர்கள் கோவில் தரிசனம் செய்தது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!