கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு புதிய நெறிமுறைகள் வெளியீடு!
இந்திய நிதி புலனாய்வு அமைப்பு கிரிப்டோ கரன்சி முதலீட்டுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் கேஒய்சி (KYC) பூர்த்தி செய்யும் போது, உயிருடன் இருப்பதை நிரூபிக்க செல்பி சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் கிரிப்டோ கணக்கை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். சில இணையதளங்களில் ஆண்டுதோறும் தானாகவே சந்தா கட்டும்போது கிரெடிட் கார்டை இணைக்க ஒரு ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கிலிருந்து கிரிப்டோ கணக்கிற்கு பணம் பரிமாற்றமும் இதன் பாகமாகும்.
பயனாளர் வசிக்கும் இடத்தை அட்சரேகை–தீர்க்கரேகை விவரத்துடன் பதிவு செய்ய வேண்டும். இதற்காக பான் நம்பர், மொபைல் எண் சரிபார்ப்பு, ஆதார் அட்டை போன்ற அடையாள விவரங்களும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பரிசோதனைக்குப் பிறகு மட்டுமே கிரிப்டோ முதலீடு செய்ய அனுமதி கிடைக்கும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!