தினம் தினம் கொடுமையா? திமுக ஆட்சியைத் தோ்ந்தெடுத்தது தப்புன்னு மக்கள் வருந்துறது தெரியலையா முதல்வரே? - எடப்பாடி ஆவேசம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் “ தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயி ஜெயராமன் தீக்குளித்ததாக வரும் செய்தி அதிா்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சி மீது மக்களுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. மக்களின் எந்த புகாருக்கும் அரசு செவி சாய்ப்பதில்லை. திமுக அரசு தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.
ராணிப்பேட்டையில் 80 வயது மூதாட்டியை 19 வயது இளைஞா் பாலியல் தொல்லை அளித்து கொலை செய்ததாக செய்திகள் வருகின்றன. மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை?. குற்றவாளிகளுக்கு பயமில்லை; அரசு இயந்திரத்தின் மீது கடிவாளம் இல்லை. மொத்தத்தில் திமுக ஆட்சியைத் தோ்ந்தெடுத்தது தவறு என தமிழ்நாட்டு மக்கள் தினமும் வருத்தப்படுகின்றனா்.
விவசாயி ஜெயராமன் உயிரைக் காக்க வேண்டும்; அவருக்கு நிவாரணம் வழங்கி, அவரது குறையைத் தீா்த்து வைக்க வேண்டும். ராணிப்பேட்டை மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை செய்த வழக்கில் தொடா்புள்ளோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!