அமெரிக்காவில் கொடூரம்... 2 மகன்களைக் கொன்ற இந்திய வம்சாவளித் தாய்!
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணம், ஹில்ஸ்பரோ நகரில் உள்ள ஷெல் கோர்ட் பகுதியில் வசித்து வந்த பிரியதர்ஷினி நடராஜன், தனது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:45 மணியளவில், பிரியதர்ஷினியின் கணவர் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது தனது இரண்டு மகன்களும் படுக்கையறையில் சுயநினைவின்றிப் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அமெரிக்கக் காவல் துறையின் அவசர எண்ணான '911'-க்கு அழைத்துள்ளார்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர், 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் இருந்த பிரியதர்ஷினி நடராஜனை போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சோமர்செட் கவுண்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரியதர்ஷினி மீது இரண்டு 'முதல் நிலை கொலை' வழக்குகள் மற்றும் சட்டவிரோதமான ஆயுதத்தை வைத்திருந்ததாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கொலை செய்ய அவர் பயன்படுத்திய ஆயுதம் என்ன என்பது குறித்த தெளிவான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
குழந்தைகளின் மரணத்திற்கான சரியான காரணம் குறித்து மருத்துவப் பரிசோதகர் அலுவலகம் (Medical Examiner's Office) ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை வந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!