கொடுமை... சிலிண்டருக்காக வரிசையில் நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

நாடு முழுவதும் கடந்த வாரம் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை தீடிரென உருவானது. சிலிண்டர் விலை ஏற்றத்திற்கு பின்னர், வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு, தற்போது நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தனது வீட்டிற்கு சிலிண்டர் புக் செய்ந்திருந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக சிலிண்டர் வாங்கிச் செல்வதற்காக கேஸ் ஏஜென்ஸியில் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்த முதியவர் ஒருவர் திடிரென மயங்கி, சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டம் செஹ்னா பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர் வாங்க காலை கேஸ் ஏஜென்சிக்கு சென்றிருந்தவர், அங்கு ஏற்கெனவே நின்றுக் கொண்டிருந்த நீண்ட வரிசையில் காத்திருந்த பூஷன் குமார் மித்தல் என்பவர், வரிசையில் காத்திருந்த போது, திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டனர். அவருக்கு வயது 66. 

தனது வீட்டினருகிலேயே சிறிய மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்த அவர் கடந்த சில நாட்களாக சிலிண்டர் வாங்க மாறி மாறி அலைந்து கொண்டே திரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!