undefined

 கிரிப்டோகரன்சி ரூ50 கோடி மோசடி... தமன்னா, காஜலிடம் விசாரணை?

 

  
உலகம் முழுவதும் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.  அந்த வகையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யுங்கள் பல மடங்கு லாபத்தை தருகிறோம் என்று சொல்லி புதுச்சேரியைச் சேர்ந்த 10 நபர்களிடம் 2 கோடியே 60 லட்ச ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து அந்த பணத்தை அவர்களால் எடுக்க முடியாமலும் அவர்களுக்கு போட்ட பணம் கூட கிடைக்க முடியாமல் கிரிப்டோ கரன்சியாக கூட வாங்க முடியாமல் பணத்தை நட்டப்படுத்தி விட்டார்கள் என்று கொடுத்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கி‌ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு 2024 ஆம் ஆண்டு சினிமா நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் கொண்டு மிக பிரம்மாண்டமாக துவக்க விழாவை நடத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசுகளை வழங்கி மேலும் மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை வைத்து பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது
 
மேற்படி கிரிப்டோ கரன்சி எந்த விதமான கிரிப்டோ கரன்சி டிரேடிங் ஆப்களிலும் வரவில்லை என்பதும் பணத்தை நேரடியாக இவர்கள் ஹைபை சர்க்கிள் என்ற ஒரு வங்கி கணக்கிற்கு புதுச்சேரியை சேர்ந்த அனைவருக்கும் தெரிய வந்தது. மேலும் டிசி எக்ஸ் என்ற ஒரு காயினை உங்களுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லி இவர்களாக உருவாக்கிய ஒரு கிரிப்டோ கரன்சியை புதுச்சேரி நபர்களுக்கு அனுப்பி அந்த டிசிஎஸ் காயினை விற்க முடியாமலும், பழையபடி பணமாக மாற்ற முடியாமலும் குழம்பி இருந்தனர்.  

இதில் புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3.6 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி சம்பந்தமாக புகார் விசாரணையில் உள்ளது. மேற்படி மோசடி கும்பல் மீது டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, மும்பை கோயமுத்தூர், பெங்களூர்,  பாண்டிச்சேரி,ஆந்திரபிரதேஷ், கேரளா,விழுப்புரம், திருப்பூர் போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்ததும் இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை இணையவழி மோசடிக்காரர்கள் திருட இவர்கள் உடந்தையாக இருந்ததும் இரண்டு வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?