CUET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!!

 

மத்திய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு கியூட் நுழைவு தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பிக்கவும், மாணவக்ரளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.


மேலும் க்யூட் தேர்வு விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  http://nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in ஐ பார்வையிடலாம். 


மத்திய பல்கலைக்கழகங்களில் 2023ல் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வை அறிவித்தது. மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!