இளநிலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) அவசியமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 11 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று (பிப்ரவரி 4) நிறைவடைகிறது. தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் https://cuet.nta.nic.in/ இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தை பிப்ரவரி 7ம் தேதி வரை செலுத்தலாம். மேலும் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பிப்ரவரி 9 முதல் 11ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் சிரமங்கள் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!