undefined

 வீடியோ!!  3 இளம்பெண்களின் முடியை இழுத்து முகத்தை மோப்பம் பிடிக்கும் கரடி!!

 

கரடிகள் குறித்து நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம். கரடி தன்னிடம் நெருங்கிவரும் சூழலிலும் அதைக் கண்டு பயப்படாது அங்கேயே படுத்துக்கொள்ள வேண்டும். அப்போது கரடி நுகர்ந்து பார்த்தபடி எதுவும் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிடும். அதனிடம் இருந்து தப்பித்து ஓடுகிறோம் அல்லது மரத்தில் ஏறி தப்புகிறோம் என தப்பு கணக்கு போட்டால் அவ்வளவு தான்.

தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மலைப் பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்ற 3 பெண்கள் கரடியிடம் இருந்து தப்புவது இந்த வீடியோவில் உள்ளது. ஒரு பெரிய கரடி மெல்ல நடந்து சென்று, அதில் ஓர் இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நிற்கிறது.

அதன் பின், எதுவும் செய்யாமல் திரும்பி நடந்து செல்ல தொடங்குகிறது. அப்போதும் அந்த இளம்பெண் அமைதியாக நிற்கிறார். ஆனால், அவருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பெண் அமைதியாகவே நிற்கிறார். ஆனால் வேறொரு பெண்ணோ கரடி தன்னை தாக்க வரும் என்ற அச்சத்தில் கொஞ்ச கொஞ்சமாய் அதிலிருந்து விலகி முன்னோக்கிச் செல்கிறார். அதனுடன் அந்த வீடியோவும் முடிவடைகிறது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டுள்ளது என தெரியவில்லை. ஆனால், இணையத்தில் வைரலாகி வருகிறது. OddIy Terrifying என்பவர் தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ, இதுவரை 6.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!