‘கார், பங்களா தருவேன் என சொல்றாங்க… ட்ரம்பால்கூட முடியாது’... சி.வி.சண்முகம் தாக்கு!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை நினைவுகூர்ந்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இன்றைக்கு புதுசு புதுசாக வர்றவங்க கருப்பு எம்.ஜி.ஆர், குள்ள எம்.ஜி.ஆர் என சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த உண்மையான எம்.ஜி.ஆர் ஒருவர்தான்” என்றார். தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசினார். எடப்பாடி பழனிசாமி அறிவித்த திட்டங்கள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், “நகரத்தில் வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். இது ட்ரெய்லர் மட்டுமே. இன்னும் பல திட்டங்கள் வரும்” என்றார். பின்னர், “இப்போ ஒருத்தர் கார் தருவேன், பங்களா வீடு தருவேன் என்று சொல்றார். அமெரிக்க அதிபர் ட்ரம்பால்கூட அப்படியெல்லாம் கொடுக்க முடியாது” என மறைமுகமாக த.வெ.க தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!