அடுத்த 48 மணி நேரத்தில் புயல் ... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், இதுவரை இயல்பை விட 5 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் மழை குறைவாக இருந்தாலும், இந்திய கடற்பகுதியில் உருவாகியுள்ள மூன்று சுழற்சிகளும் பருவமழைக்கு ஊக்கமளித்து வருவதாக கூறினார்.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என்றும், 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும், தென்காசி, திருநெல்வேலியில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.
மேலும் நவம்பர் 24 மற்றும் 26ஆம் தேதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என அமுதா அறிவுறுத்தினார். கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இடங்களில் அதி கனமழை பதிவாகி இருப்பதும் வானிலை மையம் தெரிவித்த முக்கிய தகவல்களில் ஒன்றாகும்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!