டித்வா புயல் அச்சுறுத்தல்... இன்று சென்னை விமான நிலையத்தில் 47 விமானங்கள் ரத்து!
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் 'டிட்வா' புயல் மற்றும் கனமழை காரணமாக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவது இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இன்று ஒரே நாளில் 47 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 'டிட்வா' புயல் கரையை கடக்காமல் இன்னும் வடதமிழகக் கடற்கரையை நெருங்கி வருவதால், நேற்று (நவம்பர் 29) 54 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றும் (நவம்பர் 30) அதிகப்படியான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று ரத்து செய்யப்பட்டுள்ள 47 விமானங்களில், 36 உள்நாட்டு விமானங்களும், 11 சர்வதேச விமானங்களும் அடங்கும். மொத்தம் 24 புறப்பாடு விமானங்களும், 23 வருகை விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு விமானங்கள் (36): சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து சென்னைக்கு வரும் தலா 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தச் சேவை ரத்து இன்று இரவு 9 மணி வரை அமலில் இருக்கும்.
சர்வதேச விமானங்கள் (11): இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து சென்னைக்கு வரும் 11 சர்வதேச விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புயல் மற்றும் மழையின் தாக்கம் மேலும் அதிகரிக்குமேயானால், இன்னும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இன்று விமானப் பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் அனைவரும், தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களை முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!