சிலிண்டர் வெடிப்பு… பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!
சென்னை சவுகார்பேட்டை பகுதியில் கடந்த 25ம் தேதி நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிப்பால் பட்டறை முழுவதும் தீப்பற்றியது. பலர் கடுமையாக காயமடைந்தனர். உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தில் பட்டறை உரிமையாளர் சுமன் பால் அன்றைய தினமே உயிரிழந்தார். தொடர்ந்து ஸ்ரீமந்தம்மால் மற்றும் ராகேஷ் ஆகியோரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூரஜ்(23) இன்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!