பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு... இல்லத்தரசிகளே உஷார்...  ! 

 

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தற்போது பெங்களூருவில் ஒரு வினோதமான குற்றச் செயலுக்கு வித்திட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் கர்நாடகத் தலைநகரில் சிலிண்டர் விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதன் விளைவாக, பெங்களூருவில் சுமார் 25 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நேற்று உகாதி பண்டிகை நாளில் பேகூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சிலிண்டர்களைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மக்கள் இப்போது தங்கள் வீட்டுச் சிலிண்டர்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தச் சிசிடிவி காட்சிகளில், ஹெல்மெட் அணிந்த இருவர் ஸ்கூட்டரில் ஒரு வீட்டின் முன் வந்து நிற்கின்றனர். ஒருவர் வெளியில் கண்காணிப்பில் இருக்க, மற்றொருவர் மிக லாவகமாக வீட்டிற்குள் புகுந்து இரண்டு சிலிண்டர்களுடன் வெளியே வருகிறார். பின்னர் இருவரும் அந்தச் சிலிண்டர்களுடன் மின்னல் வேகத்தில் மறைந்து விடுகின்றனர். உகாதி பண்டிகையைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த அந்த வீட்டின் உரிமையாளர், தனது சிலிண்டர்கள் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பெங்களூரு போலீஸார் தற்போது இந்த 'சிலிண்டர் கொள்ளையர்களை' தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஓட்டல்களை நம்பியுள்ள மக்கள் ஒருபுறம் உணவின்றித் தவித்து வரும் வேளையில், கள்ளச்சந்தையில் சிலிண்டர்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில சமூக விரோதிகள் வீடுகளில் புகுந்து சிலிண்டர்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். "விலை உயர்ந்த நகைகளை விட, இன்று சிலிண்டர்தான் மிக முக்கியமான சொத்தாக மாறிவிட்டது" எனப் பெங்களூரு மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நிலைமை சீரடையும் வரை பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!