உஷார்... சிலிண்டரை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை... மத்திய அரசு கலெக்டர்களுக்கு அதிகாரம்! 

 

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கடல் வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்து கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. நமது நாட்டின் சமையல் எரிவாயு தேவையில் பெரும்பகுதி இறக்குமதியைச் சார்ந்தே இருப்பதால், விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தற்போது போர்க்கால நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

குறிப்பாக ஹார்முஸ் கடல் இடுக்கின் வழியாக வரும் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதைத் தவிர்க்கவும், தேவையற்ற விலை ஏற்றத்தைத் தடுக்கவும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பல ஆண்டுகளுக்கு முந்தைய அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அரசு தற்போது அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உரத் தொழிற்சாலைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எரிவாயுவின் அளவில் பெரும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், தொழிற்சாலைகளின் இயக்கம் சற்றே மந்தமடையும் சூழல் உருவாகியுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களை ஒடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கையிருப்பு விவரங்களை உடனுக்குடன் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களின் எரிபொருள் தேவையைச் சிக்கனமாகத் திட்டமிட்டுப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!