”பேனிக் புக்கிங் செய்யாதீங்க...” முன்பதிவு காலக்கெடுவில் மாற்றமில்லை!

 

நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. "நாட்டில் போதுமான அளவு எல்பிஜி இருப்பு உள்ளது; மக்கள் தேவையற்ற அச்சத்தில் 'பேனிக் புக்கிங்'   செய்ய வேண்டாம்" என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தைப் பயன்படுத்தி, சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. குறிப்பாக, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு 45 நாட்கள், ஒற்றை சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 25 நாட்கள் மற்றும் இரட்டை சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 35 நாட்கள் எனப் புதிய முன்பதிவு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு, தற்போதுள்ள நடைமுறையே நகர்ப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 45 நாட்கள் இடைவெளி) தொடரும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், எல்பிஜி விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எங்கும் 'ட்ரை-அவுட் ‘ எனப்படும் இருப்பு இல்லா நிலை ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "வதந்திகளை நம்பி சிலிண்டர்களைப் பதுக்க வேண்டாம்; முன்பதிவு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை" என அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே, வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!