ரூ 5 க்கு பருப்பு சாதம், சப்பாத்தி.... தலைநகரில் வாஜ்பாய் நினைவாக 100 அடல் உணவகங்கள் தொடக்கம்!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தினமும் இரண்டு வேளை உணவுக்காக போராடும் மக்களுக்கு, திருப்தியான உணவு ஒரு பங்கு விலையில் கிடைத்தால் அவர்களின் மகிழ்ச்சி எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என ரேகா குப்தா தெரிவித்தார். அந்த கனவை டெல்லி அரசு நனவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
அடல் உணவகங்களில் தினமும் இரண்டு வேளை உணவு வழங்கப்படும். வெறும் 5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி, பருவத்திற்கேற்ற காய்கறி மற்றும் ஊறுகாய் வழங்கப்படும். இந்த அடல் உணவகங்கள் டெல்லியின் ஆன்மாவாக மாறும் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!