பேருந்து நிலையத்தில் நடனமாடிய யூடியூபருக்கு சம்மன்!
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தபோது சில இளைஞர்கள் நடனமாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் வசித்து வரும் யூடியூபர் ஜித்து சாஜி எடுத்ததாக கூறப்படும் அந்த காணொளியில், ஒரு இளைஞர் சேலை அணிந்து பேருந்து நிலையத்திற்குள் நடனம் ஆடுவதும், மேலும் இரண்டு இளைஞர்கள் காத்திருப்பு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் அருகில் நடனமாடுவதும் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி காணொளி எடுத்து வெளியிட்டதாக பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த காணொளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களின் முகங்கள் அவர்களின் அனுமதி இன்றி காட்டப்பட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற செயல்கள் பயணிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி வெளியிட்ட இளைஞர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!