undefined

இன்று மட்டுமே தரிசனம்... மிஸ் பண்ணாதீங்க... திருவொற்றியூா் ஆதிபுரீஸ்வரா் வெள்ளிக் கவசம் திறப்பு!

 

வருடத்திற்கு ஒருமுறை  மட்டுமே நிகழும் நிகழ்வு. இன்று மட்டுமே தரிசிக்க முடியும். மிஸ் பண்ணாதீங்க. திருவொற்றியூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலில் உள்ள ஆதிபுரீஸ்வரா் மீது மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக கடந்த டிசம்பர் 4ம் தேதி திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தையொட்டி 3 நாட்களுக்கு மட்டுமே இந்த வெள்ளிக் கவசம் திறக்கப்படும்.

சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரா், வருடம் முழுவதும் வெள்ளிக் கவசத்தால் மூடப்பட்டே பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். கடந்த டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்று இரவு 8 மணிக்குத் தியாகராஜ சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வெள்ளிக் கவசம் திறந்த நிலையில் உள்ள ஆதிபுரீஸ்வரரை, இன்று மட்டுமே பக்தர்கள் தரிசிக்கலாம்.

இன்று சனிக்கிழமை டிசம்பர் 6ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று ஆதிபுரீஸ்வராருக்குப் புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் மற்றும் மஹா அபிஷேகம் செய்யப்படும். இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு வெள்ளிக் கவசம் மீண்டும் மூடப்படும். சென்னையில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. திருவொற்றியூருக்கு சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதியும், ரயில், மெட்ரோ ரயில் வசதியும் உண்டு. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!