ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்...  தந்தையைச் சாக்கில் கட்டி 'கொரியர்' அனுப்ப முயற்சித்த மகள்...  பெங்களூருவில் அதிர்ச்சி!

 

சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' எடுத்து பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் செய்துள்ள காரியம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிரச் செய்துள்ளது. உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் ஊருக்குச் செல்ல பஸ் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்பதையும், டிக்கெட் விலையேற்றத்தையும் கிண்டல் செய்யும் வகையில் வீடியோ எடுக்கத் திட்டமிட்ட ஒரு பெண், தனது வயதான தந்தையை ஒரு பெரிய சாக்கு மூட்டையில் கட்டி கொரியர் அலுவலகத்திற்குத் தூக்கி வந்துள்ளார்.

பெங்களூருவின் வியாக்கிரவாலா பகுதியில் உள்ள ஒரு தனியார் கொரியர் அலுவலகத்திற்கு வந்த அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர், ஒரு பெரிய மூட்டையைக் கொடுத்து அதனை மங்களூருவுக்குக் கொரியர் அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர். மூட்டையில் என்ன இருக்கிறது என்று ஊழியர்கள் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு முதியவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருப்பதைக் கண்டு உறைந்து போயினர்.

உடனடியாக அந்த முதியவரை மீட்ட ஊழியர்கள், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விசாரணையில், "டிக்கெட் கிடைக்காததால் ஆட்களைக் கொரியர் அனுப்புவது எளிது" என்று ஒரு நகைச்சுவை வீடியோ எடுக்கவே இப்படிச் செய்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். முதியவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட அந்தப் பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக எச்சரித்த போலீசார், பின்னர் அவர்களை மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். "ரீல்ஸ் எடுக்கிறோம் என்ற பெயரில் மனித உயிர்களுடன் விளையாடாதீர்கள்" என்று காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!